About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Thursday, April 22, 2010

தேவ மனிதன் நெல்லை ஜெபராஜ் மறைந்தார்


தமிழகத்தின் தலைசிறந்த தேவ மனிதர்களில்ஒருவரான சுவிசேஷகர் நெல்லை ஜெபராஜ் கடந்த 19.04.10 அன்று தேவ மகிமைக்குள் பிரவேசித்தார்.

மிக அருமையான தேவ மனிதன். சுமார் நாற்பதுஆண்டு காலமாக தமிழகத்தின் பெந்தெகொஸ்தேசபைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அதிகம்தேவனால் பயன்படுத்தப்பட்டவர். இவர் மூலம்எழும்பிய ஊழியர்கள் ஏராளம். கட்டப்பட்டஆவிக்குரிய சபைகள் ஏராளம். தனக்கென ஒருகூட்டத்தையோ ஒரு ஊழிய நிறுவனத்தையோஏற்படுத்தாமல் தேவன் தன்னை அழைத்தஊழியத்தின் பாதையில் ஓடி ஓட்டத்தைமுடித்தவர். வெளிநாட்டு ஊழியத்திற்கு அனேகமுறை வாசல்கள் திறந்தபோதும், தேவன், என்னை இந்தியாவிற்காக அழைத்துஇருக்கிறார் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஒதுக்கி தள்ளிவிட்டுதேவனுக்காக ஓடியவர். எளிமையானவர். எளிதில் யாவரோடும் பழகக்கூடியவர்.
எனது மாமனார் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்.
நான் ஒரு சபையில் உதவி போதகராக ஊழியம் செய்த நாட்களில், என்னைஅதிகம் உற்சாகபடுத்தியவர். அவரது மறைவு, இன்னும் அவர் இருந்தால் அநேகர்கிறிஸ்துவுக்காக சுடர் விட்டு பிரகாசிக்க ஏதுவாக இருந்திருக்குமே என்றஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த தேவ மனிதனின் முன்மாதிரியான வாழ்வுக்காகதேவனை துதிப்போம்.
19.04.10

No comments:

Post a Comment