About Me

My photo
LONGING TO GLORIFY THE LORD JESUS CHRIST TOGETHER

Saturday, January 8, 2011

உங்கள் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது

நாம் அடிக்கடி கண்ணாடி முன் நின்று தலை வாருகிறோம். (முடி சூடா மன்னர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் அப்படித்தான் அவர்கள் பிரச்னை அவர்களுக்கு. சரி விடுங்க). அப்போது, ஒரு சில முடிகள் சீப்போடு வந்து விடுகிறன. உடனே காந்தி தாத்தா வேறு கண் முன் வந்து பயமுறுத்துகிறார். அதாங்க. வழுக்கை விழுந்து விடுமோ என்ற பயம் வருகிறது.
ஆனால், நம் தலையில் உள்ள முடிகள் என்ன செய்யும் தெரியுமா. நாம் தலை வாரும் போது, அவை ஆண்டவரிடம் "ஆண்டவரே, இருக்கவா, போகவா?" என்று கேட்குமாம். ஆண்டவர் போ என்றால் சீப்போடு வந்து விடும். இரு என்றால் தலையிலேயே இருந்து விடுமாம். இது கற்பனை என்றாலும், "அவர் சொற்படி கேட்கும் காற்று" போல இதுவும் கேட்கும் என்ற எண்ணம் தான். வசனமும் அப்படித்தானே சொல்லுகிறது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்று.

இங்கு தலை மயிர் விழுவது என்பது காரியம் அல்ல. நம் ஆண்டவர் நமது வாழ்வில் சிறு சிறு காரியங்களிலும் எவ்வளவு அக்கறையுள்ளவர் என்பதை இது காட்டுகிறது. ஆகவே நம் வாழ்வில் நேரிடும் மாற்றங்களில், தேவனின் வழிநடத்துதலையும், சித்தத்தையும் அறிந்து அதை ஏற்று கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் சொல்வது போல "விதி வலியது" என்று சொல்லலாமா. வேதம் சொல்வது போல "சகலமும் நன்மைக்கு எதுவாக நடக்கிறது" என்கிற "அறிவு" வேண்டும். சரி சரி விசயத்துக்கு வருவோம்.
கடந்த டிசெம்பர் 30,31 ம் தேதிகளில், வருட கடைசி நாட்களில் தேவ சமுகத்தில் அமர்ந்து வாக்குத்தத்தம் பெறுவதற்காக, அலுவலகத்துக்கு லீவ் போட்டேன். டிசெம்பர் மாதத்தில் யாரும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்ககூடாது என்று அலுவலக உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆகவே, லீவ் வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது என தெரிந்ததால், சொல்லாமலே லீவ் போட்டேன். 30ம் தேதி அலுவலகத்தில், எனது உயர் அதிகாரி (ஐ ஏ எஸ்) கடுப்பாகி தலைமை அலுவலகத்தில் சொல்லி பேக்ஸ் மூலம் transfer ஆர்டர் போட சொல்லி 31ம் தேதியே என்னை relieve பண்ணி விட்டார்கள். உடனே நானும் சென்று எனது தலைமை அலுவகத்தில் ஜாயின் பண்ணி விட்டேன். இதில் விசேஷம் என்னவென்றால், பொதுவாக எனது தலைமை அலுவலகத்திற்கு அதிக போட்டி இருக்கும். எனக்கு விருப்பம் அங்குதான் வேலை செய்வது. அவசரகதியில் போடப்பட்ட உத்தரவால், எனக்கு தலைமை கிடைத்தது கர்த்தருடைய கிருபை. இதில் அழகு என்னவென்றால், பழைய ஆபிஸ் செல்ல ட்ரெயினில் எப்போதும் மூன்று மாத சீசன் டிக்கெட் எடுக்கும் நான் டிசெம்பரில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் சீசன் டிக்கெட் எடுத்தேன். கர்த்தர் எப்படியாக எனக்கு ரெண்டு மாத டிக்கெட் செலவை குறைத்தார் பாருங்கள்!!!!.

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்று அறிந்திருக்கிறேன். அவர் ஆசிர்வதிக்க விரும்பினால் யாராலும் தடை செய்ய முடியாது.